[X] Close

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம்

India-and-Pak-to-clash-at-ICJ-today-over-Kulbhushan-Jadhav

குல்பூஷண் ஜாதவ் தொடர்பான விசாரணை முடியும் முன்பே அவருக்கு பாகிஸ்தான் மரண தண்டனையை நிறைவேற்றிவிடக் கூடும் என சர்வதேச நீதிமன்றத்திடம் இந்தியா அச்சம் தெரிவித்துள்ளது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உடனே உத்தரவிட வேண்டும் என்றும் இந்திய தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement

ஜாதவ் மீதான விசாரணை விவரங்களை அளிக்குமாறு 16 முறை பாகிஸ்தானை கேட்டும் அதைத் தர அந்நாடு மறுத்து விட்டதாகவும் இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் இந்திய தரப்பில் வாதிப்பட்டுள்ளது. குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியர் தங்கள் நாட்டில் உளவு பார்க்க வந்ததாக கூறி அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. ஈரானுக்கு சென்ற ஜாதவை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று உளவாளி எனக் கூறி கைது செய்து விட்டது என இந்தியா கூறுகிறது.


Advertisement

Advertisement
[X] Close