Published : 05,Jul 2019 04:31 AM
குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
மோடி தலைமையிலான புதிய அரசு முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். குடியரசு தலைவரிடம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலையும் பெற்றார்.
இந்தச் சந்திப்பின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.