[X] Close

''ஆனந்த கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்'' - தமிழ் ரசிகர்களால் நெகிழ்ந்த ஹர்பஜன்

Harbhajan-singh-thanks-to-tamil-fans

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்


Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கேவில் இணைந்த பிறகு ஹர்பஜனுக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தமிழில் ட்விட் செய்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஹர்பஜன், புலவர் என்று தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். 


Advertisement

தமிழ் ட்வீட்டோடு நின்றுவிடாமல், வேட்டி கட்டி டான்ஸ் போடுவது, இரண்டு கைகளாலும் சிலம்பம் சுத்துவது என ஒரு தமிழனாகவே மாறிபோனார். கிரிக்கெட் நேரம் மட்டுமல்லாமல் தமிழ் பண்டிகைகள் போன்ற முக்கிய நாட்களில் தமிழ் ரசிகர்களுக்கு தமிழிலேயே வாழ்த்துகள் தெரிவிப்பார்.

கடந்த 3ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார் ஹர்பஜன். புலவர் ஹர்பஜனை வாழ்த்து மழையில் நனைத்தனர் தமிழ் ரசிகர்கள்.  இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement

இது குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், ''என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது. இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும்.தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான் #ThankYouTamilnadu'' என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close