Published : 04,May 2017 05:30 AM

நாளை விண்ணில் பறக்கிறது 'சார்க்' ஜிசாட் 9

Countdown-for-Isro---s-South-Asia-Satellite-launch-on-board-the-GSLV-F09-to-begin-today

தெற்காசிய நாடுகளுக்கான ஜி சாட்9 செயற்கை கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

GSLVF 09 ராக்கெட் மூலம்‌ ஜி சாட்9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்து 23 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் பாகிஸ்தான் தவிர்த்து சார்க் கூட்டமைப்பு நாடுகளான நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த செயற்கைகோள் மூலம் பயன்பெறும். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.‌

கடந்த 2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய போது சார்க் நாடுகளின் தகவல் பரிமாற்றங்களுக்கான செயற்கைகோளை இந்தியா செலுத்தும் என கூறி இருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்