பீகாரில் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள ஈவிஎம் இயந்திரத்தை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் 7 கட்ட மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 5-வது கட்டமாக பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி ம.பி.யில் 11.82 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 13.38 சதவீத வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 9.82 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 14.49 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 13.46 சதவீத வாக்குகளும், பீகாரில் 11.51 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 0.80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் பீகாரின் சப்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது 131-வது வாக்குச்சாவடிக்குள் நுழைந்த ரஞ்சித் பாஸ்வான் என்பவர் ஈவிஎம் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார். அதில் ஈவிஎம் இயந்திரம் இரண்டு துண்டானது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix