[X] Close

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 7 பேர் கைது

Sri-Lanka-Bomb-Blast---7-Persons-Arrested

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினமான இன்று, கொழும்பு நகரில் உள்ள சில தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. அத்துடன் இரண்டு ஓட்டல்கள், குடியிருப்புப் பகுதி என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


Advertisement

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். 8 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பெரும்பான்மை தற்கொலைப் படைத் தாக்குதல்கள் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல்களை நடத்தியது ஒரே அமைப்பை சேர்ந்த குழு தான் என கூறியுள்ளார். குறிப்பிட இடங்கள் வேவு பார்க்கப்பட்டு, திட்டமிட்டு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொழும்புவில் இரண்டு நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியது எந்த அமைப்பு என்பதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பாக பல போலி தகவல்கள் பரப்பப்படுவதால், அதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் குறிப்பாக வெளிநாட்டவர்களை நோக்கி நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close