[X] Close

விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb-threat-to-four-express-trains

நீலகிரி, மங்களூரு, முத்து நகர், நெல்லை விரைவு ரயில்களில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு இன்று காலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில், 9 செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எந்தெந்த ரயில்களில் எங்கெங்கு குண்டு வெடிக்கும் என்பது பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவோயிஸ்ட்டுகள் பெயரில் வந்த அந்தக் கடிதத்தில் உள்ள செல்போன் எண்களை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் அரக்கோணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரனை காவல் துறையினர் கைது செய்தனர். மிரட்டல் கடிதம் உண்மையா, யாரையாவது சிக்க வைக்க வைக்க மிரட்டலா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close