[X] Close

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம்” - எடப்பாடி பழனிசாமி

Can-give-Nobel-Prize-to-MK-Stalin--CM-Palanisamy

பொய் பேசுவதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் எனத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி மலர வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, தகுதியான பிரதமராக உள்ள நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக வர வேண்டும். அப்போது நாடு பாதுகாப்பாக இருக்கும்.


Advertisement

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம் என்று தனியார் நிறுவனம் விருது கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சிறந்த காவல் நிலையம் குறித்த ஆய்வில், தமிழகம் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அண்ணாநகர் காவல் நிலையம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால், ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை எனப் பொய் பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் முதல் ஆள் ஸ்டாலினுக்குதான் கொடுக்க வேண்டும்” என்றார் 


Advertisement

Advertisement
[X] Close