பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின. அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் சிறைபிடிக்கப்பட்ட போது, அவரை பாகிஸ்தான் வாசிகள் தாக்குவது போலான வீடியோக்கள் வெளியாது. அத்துடன் அபிநந்தன் தொடர்பான மேலும் சில வீடியோக்களும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
இந்நிலையில், அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை விசாரிப்பது, காயத்துடன் அவரை இழுத்துச்செல்வது ஆகிய வீடியோக்களையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை யூடியூப் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அபிநந்தன் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டதற்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!