லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் உத்தர பிரதேசம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அலகாபாத் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ விமானநிலையத்தில் சட்ட ஒழுங்கு காரணங்களுக்காக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த விவகாரம் உத்தர பிரதேசத்தின் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது.
அகிலேஷ் தடுக்கு நிறுத்தப்பட்டதை கண்டித்து சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். பல இடங்களில் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதுடன் காவல்துறையினருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சமாஜ்வாதி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் சென்றிருந்தால் பல்கலைக்கழகத்தில் இரண்டு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதாலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தாம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் இன்று புகார் அளிக்க இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!