வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா ? யாருடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு மக்கள் நீதி மயத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புண்டு என அவர் முன்பே அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த ஆலோசனைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழ்க்கு அவர் அரசியல் தொடர்பாக பேட்டியளித்துள்ளார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா ? என்ற கேள்விக்கு, தேசிய அரசியல் ஒருணங்கிணந்தது மற்றும் மாநில அரசின் நன்மைக்கு அது தவிர்க்க முடியாது என்றார்.
அத்துடன் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்புகள் வருவதாகவும், ஆனால் மற்ற கட்சிகளின் கொள்கைளுடன் தாங்கள் இணைந்து செல்ல தயாராக இல்லை என்றும் கூறினார். எனினும் சில நிபந்தனைகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், எந்தக் கட்சியுடனும் இணக்கமாக இருக்காது என்றும், சரியான நேரம் வரும் போது மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டணி அமைக்கும் என்று கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு தாமதம் ஆவது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அரசியலுக்கு வருவதை முடிவு செய்ய வேண்டியது ரஜினிதான். அவரது சுய முடிவு தான் அவரை தாமதிக்க வைக்கிறது என்றார்.
அரசியல்வாதியாக மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, “நீங்களும் எங்களை ஏமாற்றிவிடாதீர்கள்” என மக்கள் நான் செல்லும் இடங்களில் சொல்கிறார்கள்” என்றார். இளைஞர்கள் தங்களை நம்புவதாகவும் கமல் கூறினார். திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கிராமப் புறங்களில் இருந்து தொடங்குவதே நல்ல அரசாங்கம். அதை, நான் அரசியல் ஈடுபட தொடங்கிய போது கூறினேன். தற்போது திமுக அதை நடமுறைப்படுத்தவது, எனது அரசியல் முறை பிரதிபலிப்பதற்கு எடுத்துக்காட்டு” என்றார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'