[X] Close

பிரேசில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு

121-Killed--226-Missing-In-Brazil-Dam-Disaster

பிரேசிலில் இரும்பு தாது சுரங்கம் அருகே இருந்த அணை உடைந்த விபத்தில், சகதியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 221 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புமாடின்கோ நகரம் அருகே மினாஸ் கெராய்ஸ் என்ற இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய‌ சுரங்க நிறுவனமான வாலே, என்ற நிறுவனம் இந்தச் சுரங்கத்தை நிர்வகித்து வருகிறது. இதன் அருகில் இருக்கும் அணைக்கட்டு பராமரிப்பையும் வாலே நிறுவனமே கவனித்து வருகிறது. இதனிடையே அணைக்கட்டில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி, அணையின் ஒரு பகுதி உடைந்ததில், ஊருக்குள் சேரும், சகதியுமான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அருகில் இருந்த சுரங்கத்தில் வேலை செய்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.


Advertisement

மேலும் அணையின் வளாகத்தில் இருந்த உணவகமும் வெள்ளத்தில் சிக்கி புதைந்தது. அணையை ஒட்டியிருந்த நிறுவனங்கள்‌, தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதிகளும் சகதியில் புதைந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 222 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 1 வாரங்கள் ஆகிவிட்டதால் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அவர்களின் உடலை மீட்பதில் வீரர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close