விஸ்வாசம் படத்தில் மதுரை வழக்கில் அஜீத் அசலாக பேசியிருப்பதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
அஜீத், நயன்தாரா, சத்யராஜ், ஜெகபதிபாபு, பிரபு, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விஸ்வாசம்’. டி.இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவா இயக்கியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படம் ரஷ்யாவிலும் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல டிரைலர் வெளியான அன்று சென்னையிலுள்ள பல திரையரங்கங்களின் முன்பாக திரை ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. டிக்கெட் புக்கிங்கிலும் இந்தப் படம் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தப் படத்தில் மதுரை ஸ்லாங்கில் அஜீத் பேசியுள்ளதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘’படத்தில் சிறப்பான கருத்து இடம்பெற்றுள்ளது. இது குடும்ப படம். எல்லோரும் பிடிக்கும் விதமாக இருக்கும். அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமல் லாமல் எல்லோரும் ரசிக்கும்படியான விஷயங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அஜீத், மதுரை ஸ்லாங்கில் பேசியிருக்கிறார். அவர் பேசியதைக் கேட்டு மதுரையை சேர்ந்த நடிகர்களே அசந்துவிட்டார்கள்’’ என்றார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!