[X] Close

ஜோசியரை வெட்டிக் கொன்றது ஏன்? - கொலையாளியின் கோரப் பின்னணி..!

Tiruppur-Astrologer-Murder-Facts---Killer-in-Mentally-Affected-People

மற்றொருவரின் மனைவியை வசியம் செய்து வாழ்ந்து வந்ததாக நம்பிக்கொண்டிருந்த ரகு என்பவர், தற்போது அப்பெண்ணை ஜோசியர் மறைத்து வைத்துள்ளதாக நினைத்து அவரை கொன்றுள்ளார்.


Advertisement

திருப்பூர் குமரன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கிளி ஜோசியர் பட்டப்பகலில் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த ரகு என்பவர் அரிவாளால் சரமாரியாக ஜோசியரை வெட்டிக்கொன்றார்.


Advertisement

அதன் பின்னர் பொதுமக்களுக்கு சாவகாசமாக துண்டுப் பிரதிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் வழங்கிய துண்டுப் பிரதியில், ஜோசியர் ரமேஷ் பூங்கா பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்த்துவந்துள்ளதாகவும், அங்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்காணித்து தீயசக்தி மூலம் பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற ரகுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விசாரணையில் மூடத்தனத்தின் உச்சத்தில் ரகு இருப்பது தெரியவந்துள்ளது. நாகை குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ரகு, 9 ஆண்டுகளுக்கு முன் மற்றொருவரின் மனைவி ப்ரியாவை வசியம் செய்து தரும்படி, ஜோதிடர் ரமேஷை அணுகியுள்ளார். ஜோதிடர் ரமேஷும் பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வசியம் செய்ய மாந்திரீகம் செய்துள்ளார். அதன் பின்னர் ப்ரியாவுடன் இணைந்து வாழத் தொடங்கியதால், அதற்கு காரணம் ஜோதிடரின் மாந்திரீகமே காரணம் என நம்பியுள்ளார் ரகு. ஆனால், இந்த உறவு நீடிக்காமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முறிந்துபோனது. 


Advertisement

குடும்பப் பிரச்னையால் ரகுவை விட்டு ப்ரியா பிரிந்து சென்றார். அவர் பிரிந்து சென்றதால் மீண்டும் ஜோதிடர் ரமேஷை நாடி, மாந்திரீகத்தின் மூலம் வசியம் செய்ய ரகு வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜோதிடர் மறுத்துள்ளார். அதேவேளையில் ப்ரியாவும் காணாமல் போனார். ஜோதிடர் ரமேஷ் தான் ப்ரியாவை வசியம் செய்து மறைத்து வைத்துள்ளதாக கண்மூடித்தனமாக ரகு நம்பத்தொடங்கினார். ஆத்திரமடைந்த ரகு கடந்தாண்டு இடுவம்பாளையில் ஜோதிடரை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது லேசான காயங்களுடன் உயிர்தப்பிய ஜோதிடர், தற்போது ரகுவிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். ஜோதிடரின் தவறான செயலும், ரகுவின் மூடத்தனமும் கொலையில் முடிவடைந்திருக்கிறது.
 


Advertisement

Advertisement
[X] Close