[X] Close

நடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்!

Chinese-university-cancels-Aamir-Khan-event

இந்திய நடிகர் ஆமிர்கான் பங்குபெறும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையான அனுமதி பெறாததால் சீன பல்கலைக் கழகம் ரத்து செய்தது.

அமிதாப் பச்சன், ஆமிர்கான், பாத்திமா சனா சேக், கேத்ரினா கைப் உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம், ’தக்ஸ் ஆப் இந்தோஸ் தான்’. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கிய இந்த படத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளா ர். நவம்பர் மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆன இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


Advertisement

இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. இதற்கான புரமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. நடிகர் ஆமிர்கான் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் சீனாவின் குவாங்ஸோவில் உள்ள நிதி மற்றும் பொருளாதாரத்துக் கான குவாங்டாங் பல்கலைக்கழகத்தில், இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடப்பதாக இருந்தது. அதில் ஆமீர்கான் பங்கேற்க இருந்தார். ஆனால், முன் அனுமதி பெறாமல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து உடனடியாக அந்நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் ரத்து செய்தது.

பின்னர் உடனடியாக வேறு இடம் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி நடந்தது. இதுபற்றி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, ‘’நிகழ்ச்சி நடக்கும் நாள் வரை, படத்தின் விளம்பர நிகழ்ச்சி என்பது நிர்வாகத்துக்குத் தெரியாது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் ஒரு மணி நேரமாக காத்திருந்துவிட்டு ஏமாற்றமடைந்தனர். ஏற்கனவே இது போன்று சில நிகழ்ச்சிகள் முன் அனுமதியுடன் இங்கு நடந்திருக்கின்றன. அனுமதி பெற்றிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறு’’ என்று தெரிவித்துள்ளது.


Advertisement

பின்னர் இந்த நிகழ்ச்சி, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு நடந்தது. 

Related Tags : Aamir KhanChineseuniversityGuangdongThugs of Hindustan

Advertisement

Advertisement
[X] Close