மதுபோதையில் கார் ஓட்டியதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்
சென்னை அடையாறு திருவிக மேம்பாலம் அருகில் வாகனச்சோதனை நடைபெற்றதாகவும், அப்போது அவ்வழியாக வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது காரில் இருந்து கீழே இறங்காமல் தன்னை அங்கிருந்து போகவிடும்படி போலீசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் போலீசார் ரூ. 3,500 அபராதம் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் காயத்ரி ரகுராம் உச்சகட்ட போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்ட போலீசார் அனுமதி மறுத்து போலீசாரே அவரது காரை ஓட்டிச்சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரை கொண்டு போய் பத்திரமாக விட்டு விட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னிடம் போக்குவரத்துக் காவலர் வழக்கமான சோதனையிலேயே எனது ஆவணங்களை சரிபார்க்க வந்தார். ஆனால் அப்போது லைசென்ஸ் என்னிடம் இல்லை. எனது லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை மற்றொரு ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தேன்.
நான் அவருடன் எந்தவித வாக்குவாதத்திலோ, சண்டையிலோ ஈடுபடுவில்லை. அவர் எனது தந்தையைப் பற்றி பேசினார். அவரும் எனது ரசிகராக இருந்தார். அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் காரை நான் தான் ஓட்டிச்சென்றேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் காரை ஓட்ட போலீசார் எப்படி என்னை அனுமதித்திருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது போன்ற கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்