நடிகை பிரியங்கா சோப்ரா- ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் நடக்க இருக்கும் ஜோத்பூர் அரண்மனையின் ஒரு நாள் வாடகைத் தொகை தெரிய வந்துள்ளது.
தமிழில், விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
Read Also -> விஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்!
இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாகக் கூறப்பட்டது.
இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அங்கு சிறப்பு பூஜையும் நடந்தப்பட்டது.
Read Also -> எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது!
இந்நிலையில் இவர்கள் திருமணம் ஜோத்பூரில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஜோத்பூர் சென்று திருமணம் செய்துகொள்ள இருக்கும் உமைத் பவன் அரண்மனையை (Umaid Bhawan Palace) பார்வையிட் டனர்.
இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, அதை அமெரிக்காவில் பதிவு செய்வதற்கான பணிகளில் நிக் ஜோனாஸும் பிரியங்கா சோப்ராவும் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப் பங்களை இருவரும் சமர்ப்பித்துள்ளனர். இந்த உரிமச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு இருவரும் இந்தியா வர இருக்கின்றனர். இதையடுத்து திருமணத்தை இரண்டு நாடுகளிலும் பதிவு செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
Read Also -> “சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே இவர்கள் திருமணம் நடைபெறும் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனை (Umaid Bhawan Palace) யின் ஒரு நாள் வாடகை என்ன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, 60 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.43 லட்சம்! இந்த அரண்மனையில் 347 அறைகள் உள்ளன.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'