பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த மாதம் 23 ஆம் தேதி பங்களாதேஷில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மோர்டாஸாவை களமிறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் அலம் ஹனிஃப் கூறும்போது, ‘மோர்டாஸா போட்டியிட பிரதமர் ஷேக் ஹசினா பச்சைக் கொடி காட்டிவிட்டார். மோர்டாஸாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். பங்களாதேஷின் மேற்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தொகுதியான நரேலில், மோர்டாஸா போட்டியிடுகிறார்’ என்றார். இதுபற்றி மோர்டாஸா வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.
(ஷேக் ஹசினாவுடன் மோர்டாஸா)
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, ‘கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் பயன்படுத்த விரும்பினால், அதனால் எங்களுக்கு பிரச்னை இல்லை. விளையாட்டை விட்டுவிடாமல், இதையும் கவனித்துக்கொண்டே அரசியலிலும் அவர் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவது புதிதில்லை. ஆனால், ஓய்வுபெற்ற பிறகுதான் அரசியலில் ஈடுபடுவார்கள். அணியில் இருக்கும் வீரர் ஒருவர், அரசியலில் களமிறங்குவது இதுதான் முதல் முறை எனக் கூறப்படுகிறது.
மோர்டாஸா, அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2009 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 199 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்டாஸா, 252 விக்கெட்டுகளையும் 1722 ரன்களையும் எடுத்துள்ளார்.
மோர்டாஸா அரசியல் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஓமர் பாருக் என்ற ரசிகர் அவரது முகப்புத்தகத்தில், ‘நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் இது அவரது மோசமான முடிவு’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai