[X] Close

உத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 

Cyclone-Impact---Heavy-rain-fall-in-Odisha

ஒடிசா மற்றும் ஆந்திராவை அச்சுறுத்தி வந்த டிட்லி புயல் கரையை கடந்தது. மரங்கள், மின் இணைப்புகள் மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் மக்களி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயல் காரணமாக இரவு முழுவதும் மழை நீடித்தததால் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 105 கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்புடன் அழைத்து வரும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.


Advertisement

இந்த நிலையில் டிட்லி புயல் தீவிரமடைந்து ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூரில் இன்று காலை 5.30 மணியளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 13 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடந்தாலும் கோபால்பூர் பகுதியில் மணிக்கு 126 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்கிறது. ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் 56 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. டிட்லி புயலின் தாக்கம் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி, ருத்ராபிரயாக், உத்தர்காசி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close