Published : 28,Sep 2018 04:02 PM

சராசரி மழையைவிட வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும்

Kovai-Agricultural-University-Climate-Research-Center-has-advised-to-Farmers

தமிழகத்தில் இந்த வருட வடகிழக்கு பருவமழை,சராசரி மழையளவை விட கூடுதல் மழையளவு கிடைக்கும் என்பதால் விவசாயிகள் தயாரக இருக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம், இந்த வருட வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 15% குறைவான அளவே பெய்ததாக கூறப்படும் நிலையில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகளவு இருக்கும் என ஆராய்ச்சி மையம் கணித்து உள்ளது. 

மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகபட்டினம் மாவட்டத்தில் 924 மில்லி மீட்டர் மழையளவும் அடுத்தபடியாக சென்னை,கடலூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக பெய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 281 மில்லி மீட்டர் மழையளவு பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடலோர மாவட்டங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும், குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசனநீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக மூன்று மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும் என்பதால், பன்னைகுட்டைகள் மூலமாக தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மானாவாரி சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடலாம் என அறிவுருத்தியுள்ளனர். மேலும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்