Published : 27,Aug 2018 06:06 AM
தடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்!

பெண்களுக்கான 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார் டூட்டி சந்த். ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல போராட்டத்தை சந்தித்து இந்த சாதனையை செய்திருக்கிறார் டூட்டி சந்த். 2014 ஆண்டு நடத்தப்பட்ட பாலியல் சோதனையில் இவர் உடலில், ஆண்களுக்கு இருக்கும் ஆண்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகக் கூறி சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை செய்தது. மனம் தளராத டூட்டி, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் அப்பீல் செய்தார். தனது உடலில் உள்ள குறைக்குத் தான் பொறுப்பல்ல என வாதா டினார். அதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் அவர் மீதான தடையை நீக்கியது.
Read Also -> இரட்டை சதத்துடன், 8 விக்கெட்: அழைப்புக்கு காத்திருக்கிறார் அசத்திய மொயின்!
Read Aslo -> முன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்
இருந்தும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இந் நிலையில் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உதவியிருக்கிறார். இப்போ தும் ஐதராபாத்தில் உள்ள அவரது பயிற்சி அகாடமியிலேயே தங்கியிருக்கிறார் டட்டி.
டட்டியுடன் இந்தோனேஷியா சென்றுள்ள கோபிசந்த் கூறும்போது, ’டூட்டி சாதித்திருப்பதால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். பல விளையாட்டு வீரர்களுக்கும் அத்லெட்களுக்கும் இவர் உத்வேகமாக விளங்குவார். சாதிக்கத்துடிக்கும் பலருக்கு இவர் கண்டிப்பாக ரோல்மாடலாக இருப் பார். டூட்டியின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன்’ என்றார்.