Published : 05,Aug 2018 02:14 AM
சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து விசாரித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காவேரி மருத்துவமனை வருகிறார். இதையொட்டி, சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை போக்குவரத்து ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று பிற்பகல் 2.15 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் வருகை தருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவேரி மருத்துவமனை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. காவேரி மருத்துவமனை உள்ளேயும் வெளியேயும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியை கடந்த வாரம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.