[X] Close

டிடிவி தினகரனுக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

MK-Stalin-alleged-TTV-Dhinakaran

டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலளித்து தன் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் நகரில் தொடர்ச்சியாக பணம் பட்டுவாடா நடைபெறுவதாக மசூசூதனன் கூறியுள்ள புகார் குறித்து கேட்டபோது, திமுக சார்பில் இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என கூறினார்.

எம்எல்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பிய போது, விளம்பரம் தேடும் நோக்கில் டிடிவி தினகரன் இவ்வாறு பேசுவதாகவும், அவரின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளித்து தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close