கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி டிராபிக் போலீஸ் அதிகாரியை முட்டாள் என்று திட்டிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான கிருஷ்ணமூர்த்தி பெங்களூரு நகரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் வேகமாக வந்ததாக கூறி டிராபிக் போலீஸ் ஒருவர் அவரது காரை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி அவருக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு என்னுடைய பணியைதான் நான் செய்கிறேன் என்று அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
அதற்கு போலீஸ் அதிகாரியை கிருஷ்ணமூர்த்தி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. போலீஸை இடியட் என்று திட்டிய அவர், யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறீர்கள் என்று கூறியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல், நான் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டவன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்தக் காட்சிகள் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது. அக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இருவரும் கன்னட மொழியில் பேசிக் கொள்வது போல் உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி சத்தமாக போலீஸை இடியட் என திட்டுவது தெளிவாக கேட்கிறது. முதலில் அவரது உதவியாளர்தான் பேசுகிறார். உதவியாளர் சொல்லியும் போலீஸ் கேட்காத நிலையில் கோபமடைந்து கிருஷ்ணமூர்த்தி திட்டினார். இந்த வீடியோ பதிவுகள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் கிருஷ்ண மூர்த்தி மஞ்சுநாதா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால், மஜத வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
வீடியோ பதிவில் உள்ள உரையாடல்:
போலீஸ் அதிகாரி: கிருஷ்ணமூர்த்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி உறுப்பினரா?
கிருஷ்ணமூர்த்தி உதவியாளர்: அவர் வெறும் உறுப்பினர்கள் மட்டுமல்ல. தசரஹல்லி தொகுதியின் வேட்பாளரும் கூட. அவருக்கு வழிவிடு. நீ வெளியாள். உனது வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று உனக்கு தெரியாது.
போலீஸ்: நாங்கள் ஏன் விட வேண்டும்? காரில் வேகமாக சென்று அவர் யாரையேனும் கொல்லக் கூடும்?
(கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி)
கிருஷ்ணமூர்த்தி: நான் யார் என்று தெரிகிறதா? தூர செல். முட்டாளைப் போல் பேசுகிறாய். நீ ஒரு சோம்பேறி. முட்டாள், நான் உன்னை குத்திவிடுவேன்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்