[X] Close

காட்டில் எரியப்பட்ட சிறுமியின் சடலம் ! பாலியல் வன்கொடுமையின் கொடூரம் !

Seven-Year-old-Girl-Raped-and-Thrashed-in-Maharastra

மத்தியப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை ஆளாக்கி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த செவ்வாய்கிழமை 2வது படிக்கும் மாணவி காணாமல் போனார். சிறுமியை வழக்கமாக அவரது தாத்தா தான் பள்ளிக்கு அழைத்து சென்றுவந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியை அழைத்துச் செல்ல அவரது தாத்தா பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மாமா வந்து அழைத்துச்சென்றதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். அடுத்தநாள் காலை பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி சுயநினைவின்றி கிடந்துள்ளார். அப்பகுதியில் காலி பீர் பாட்டில் ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கூறிய ஆயுதத்தால் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.


இதற்கிடையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சிறுமி ஒருவரை பின் தொடர்ந்து செல்வது தெரிந்தது. அந்த நபர் அப்பகுதியை சேர்ந்த இர்பான் என்பது தெரியவந்தது.இதனையடுத்து அந்த நபர் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close