[X] Close

“இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை”: விஜய் முடிவு? 

Vijay-to-skip-birthday-celebrations-in-view-of-Thoothukudi-killings

ஜூலை 22 நடிகர் விஜய் பிறந்தநாள். அவரது ரசிகர்கள் அதனை மிக விமர்சையாக கொண்டாட காத்துள்ளனர். ஆனால் இந்த வருட பிறந்தநாளை விஜய் கொண்டுவது இல்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 


Advertisement

கடந்த மே மாதம் 22ஆம் தேதி தமிழத்தில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்தத் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற கடந்த 6 ஆம் தேதி நடிகர் விஜய் நடு ராத்திரியில் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.  அப்போது புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் விஜய் கூறினர். 

மேலும் அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார். பகலில் சென்றால் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் விஜய். இதனிடையே விஜய் வருகை குறித்து பாதிக்கப்பட்டவர்கள், “ மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டப்படி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்.  ‘நேரம் பிந்தி வந்தேம்மா’ அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என தெரிவித்தனர்.


Advertisement

இந்தச் சோக சம்பவம் நடிகர் விஜய்யை மனரீதியாக மிகவும் பாதித்துவிட்டதாக தெரிகிறது. ஆகவே இந்த ஆண்டு தனது பிறந்தநாளை விஜய் கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close