Published : 21,May 2018 04:59 AM
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா வதேரா ஆகியோரும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.