[X] Close

கல்லி கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட்டின் கில்லி

Sachin-Tendulkar-plays-gully-cricket-in-Mumbai

மும்பை சாலையில் சச்சின் டெண்டுல்கர் கல்லி கிரிக்கெட் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது 


Advertisement

ஒரு கிரிக்கெட் வீரருக்கு மூன்று தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது சச்சின் டெண்டுல்கருக்குதான். உலக அரங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் சச்சினுக்கு உண்டு. உலக அரங்கில் மிகவும் சிறப்புமிக்க மைதானங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இதற்கெல்லாம் அடித்தளம் தெருவில் முதலில் சக தோழர்களோடு விளையாடியதுதான். கல்லி கிரிக்கெட்தான் எல்லா வீரர்களுக்கும் அடித்தளம்.பால்ய வயதில் நண்பர்களுடன் தெருக்களில் விளையாடி தங்களது திறமையை முதலில் மேம்படுத்தி கொள்வர்.

தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைக்கட்டி வருகிறது. கல்லி கிரிக்கெட் ஆடிய இளம் வீரர்கள் பலர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டுள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாலையில் கிரிக்கெட் ஆடி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


Advertisement

வீடியோவில், சச்சின் டெண்டுல்கர் காரில் இருந்து இறங்கி சாலையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களிடம் இருந்து பேட்டை வாங்குகிறார்.அந்த இளைஞர்கள் சச்சினின் காலில் விழுந்து வணங்க முயல்கின்றனர். அவர்களை தடுத்து அனைவருடனும் கைக்குலுக்குகிறார். பின்னர் அவர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close