[X] Close

‘மீம்ஸ் போட்டு காயப்படுத்த வேண்டாம்’:வைகோ வேண்டுகோள்

Cauvery-issue--Vaiko---s-nephew-sets-himself-on-fire

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பணம் பெற்றுக் கொண்டதாக நாம் தமிழர் கட்சியினர் தன் மீது பொய் பிரச்சாரம் செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


Advertisement

விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் இன்று காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவர் காவிரி பிரச்சனைக்காக தீக்குளித்ததாக சொல்லப்பட்ட நிலையில், இதை கேள்விபட்டதும் மருத்துவமனைக்கு சென்ற வைகோ கண்ணீர் விட்டு கதறினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தான் பணம் பெற்றுக் கொண்டதாக நாம் தமிழர் கட்சியினர் செய்யும் பொய் பரப்புரையால் தனது குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மாதிரியான பொய் பரப்புரையை தான் தாங்கி கொள்வேன் என்றும் ஆனால் அதை என் வீட்டியில் இருப்பவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் தான் பணம் பெற்றுக் கொண்டதாக தன் மீது பொய்யான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வந்த 'மீம்ஸ்' களால் சரவண சுரேஷ் மனஉளைச்சலில் இருந்ததாகவும் வைகோ தெரிவித்தார்.  அதேபோல் காவிரி உள்ளிட்ட எதற்காகவும் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்றும் வைகோ கேட்டுக் கொண்டார்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close