Published : 28,Mar 2018 01:43 PM

பாதுகாப்பாக உள்ளதா தகவல்கள்? - ஃபேஸ்புக்கிற்கு இந்தியா நோட்டீஸ்

Government-issues-notice-to-Facebook-seeking-details-on-data-breach

இந்தியர்களின் விவரங்களை விற்பனை செய்த புகாரில் ஃபேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம் தன்னிடம் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தது. தவறு நடந்துள்ளதை ஃபேஸ்புக் நிறுவனரும் ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், இந்தியர்களின் விவரங்களை விற்பனை செய்த புகாரில் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், இந்தியர்களின் ஃபேஸ்புக் தகவல் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே, இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் பயனர்களிடமிருந்து தகவல்களை பயன்படுத்தினீர்களா, யாருக்காக தகவல்களை பெற்றீர்கள் என விளக்கம் அளிக்குமாறு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 6 முக்கிய கேள்விகளுக்கு மார்ச் 31-க்குள் பதில் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு, விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்