[X] Close

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் திருட்டு

Theft-of-the-famous-actor-s-former-wife-home

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி, இவருக்கும் பிரசாந்திற்கும் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் சகோதரர் நாகராஜ் உடன் வசித்து வருகிறார். நேற்றிரவு இவர் குடும்பத்தோடு கீழ் தளத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக முதல் தளத்திற்குச் சென்று, பிரேவில் இருந்த 170 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 

காலையில் எழுந்த நாகராஜ் பின் பக்கக் கதவு உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த அறை கிரகலட்சுமியின் அறை என்றும் தற்போது கிரகலட்சுமி அடையாறில் தங்கி உள்ளதாகவும் இங்கு வரும் போது கொள்ளை நடந்த அறையில்தான்  அவர் தங்குவது வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர். பின் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close