ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து நேற்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த 2007இல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியை நாடி, அதற்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததாக ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தெரிவித்தது. அத்துடன் ப.சிதம்பரத்திற்கு எதிராக இந்திராணி சாட்சியம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்தது. பின்னர் கார்த்தி சிதம்பரத்தை 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் ஒரு நாள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஒருநாள் காவல் முடிந்து இன்று மீண்டும் கார்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்கு சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்