[X] Close

சென்னை மெட்ரோ ரயிலில் வாடகை பைக் திட்டம் அறிமுகம்

introducing-bike-rental-at-chennai--metro-rail-limited-

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்ல வேண்டுமென்றால், இனி வாடகை பைக் எடுத்துக்கொண்டு செல்லலாம்.


Advertisement

சென்னையில் நேரு பூங்கா முதல் விமான நிலையம் மற்றும் பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் வாடகை சைக்கிள் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
இப்போது வாடகை பைக் திட்டத்தையும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி ஸ்கூட்டி முதல் ராயல் என்பீல்ட் பைக் வரை பயணிகள் வாடகைக்கு எடுத்துச் செல்லாம். ஒவ்வொரு விதமான  வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்காக தனியார் வாகன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், பைக், ஸ்கூட்டர் வாடகை திட்டமும் மக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 8 பைக்குகள், விமான நிலையத்தில் 10 பைக்குகள் வாடகைக்கு நிறுத்தி உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.450, அதிகபட்சமாக ரூ.5,500 என நிர்ணயிக்ப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close