[X] Close

அழிவின் விளிம்பில் கற்றாழை கயிறு தயாரிப்பு: கவனிக்குமா அரசு?

People-request-government-to-save-their-business

கற்றாழை நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழிலை அழிவிலிருந்து பாதுகாக்க அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தருமபுரி மண்ணின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கற்றாழைக் கயிறு திரிக்கும் தொழில்  நவநாகரிக வளர்ச்சியால் தற்போது மிகவே அருகிப்போயிருக்கிறது. பேச்சு வழக்கில் கத்தாழை என்றழைக்கப்படும் கற்றாழையை வறண்ட பகுதிகளில் அதிகம் காண முடியும். மருத்துவக்குணங்கள் நிறைந்த கற்றாழை முற்றிக்காய்ந்த பிறகு, அதிலிருந்து நார் எடுத்து கயிறு திரிப்பது பாரம்பரிய தொழில்.


Advertisement

இந்தக் கயிற்றிலிருந்து மாடுகளுக்கு கயிறு தயாரித்தலும், கயிற்றுக் கட்டில் போடுவதும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கமானதாக இருந்தது. நாளுக்கு நாள் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதால், பிளாஸ்டிக் ஆதிக்கம் இந்தப் பாரம்பரிய வழக்கத்தை நம்மிடமிருந்து கடத்திவிட்டது. ஆனால் அனைத்து பொருள்களிலும் பிளாஸ்டிக் வருகை தொடங்கி, கயிற்றுக் கட்டில் காணாமல் போய், பிளாஸ்டிக் வகையான நைலான் கொண்டு பின்னப்பட்ட நாடா கட்டில் பழக்கத்துக்கு வந்தது. அதுபோலவே மாட்டுக்கு நைலான் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் தருமபுரி மாவட்டம் பூச்செட்டிஅள்ளியில்  சுமார் 150 குடும்பங்கள் கற்றாழை நார் எடுத்துகயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போது கற்றாழை நாரில் இருந்து கயிறு திரிப்பதை மிக அரிதாகவே காணமுடிகிறது. இதற்கு நன்கு வளர்ந்த -முற்றிய கற்றாழைகள் கிடைக்காததும், வேலைக்கேற்ற கூலி கிடைக்காததும் காரணம். இதனால் பூச்செட்டிஅள்ளி கிராமத்தில் இந்தத் தொழில் செய்தவர்கள், வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். தற்பொழுது 3 பேர் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வருகின்றனர்.


Advertisement

இந்தக் கற்றாழையில் இருந்து நார் எடுத்து கயிறு திரிக்கும் தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டுமானால், கிராமப்புற மகளிர் குழுக்களுக்கு இதற்கான பயிற்சியை அளித்து, தேவையான அளவுக்கு கடனுதவியும் வழங்க வேண்டும். மேலும், தென்னை நாரில் இருந்து கயிறு திரிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்தைபோலவே, கற்றாழைக்கும் அரசு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close