அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்று வரும் நுகர்வோர் மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சியில் சீன தயாரிப்பு சாதனங்கள் அதிக இடம்பிடித்துள்ளன. இந்த சாதனங்கள் உலக முன்னணி நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அமெரிக்காவில் லாஸ் வேகஸ் நகரில் நுகர்வோர் மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 9 ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 4000 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சுமார் 20000 தொழில்நுட்ப சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீன தயாரிப்புச் சாதனங்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. பாய்டு (Baidu) மற்றும் அலிபாபா (Alibaba) போன்ற தொழிற்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய சுமார் 5500 சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் மின்னணு உற்பத்தி நிறுவனமாக ஹைசென்ஸ் (HISENSE)-ன் சமீபத்திய கண்டுபிடிப்பு 100 இன்ச் 4கே லேசர் டிவி. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் (FOX SPORTS) நிறுவனத்துடன் இணைந்து ஆப் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த டிவியில் பதிவிறக்கப்பட்ட ஆப் மூலம் 2018 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்ப அனுமதித்துள்ளது.
சீனத் தொழில்நுட்ப நிறுவனமான 90ஃபன் (90FUN) புதிய ஸ்மார்ட் சூட்கேசை உருவாக்கியுள்ளது. இதன் சூட்கேஸ் நாய்க்குட்டி போல் உரிமையாளரை பின்தொடர்கிறது. சமநிலையிலும், இரு சக்கரங்களில் உரிமையாளரின் வேகத்துக்கு ஏற்றவாரு நகர்கிறது. ஷேக்வே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உரிமையாளர் வைத்திருக்கும் டிராக்கிங் சாதனத்தை பின்பற்றும் இந்தச் சூட்கேஸ், காணாமல் போனால் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கும் வசதியும் கொண்டுள்ளது. கைரேகை ஸ்கேனிங் மூலம் இந்த ஸ்மார்ட் சூட்கேசை லாக் செய்ய முடியும்.
சீன உற்பத்தியாளர்கள் மின்னணு தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். நுகர்வோர் மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சி சீனாவின் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்களின் தயாரிப்பை சந்தைப்படுத்த முக்கிய வாய்ப்பாக உள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்