[X] Close

98 வயதில் முதுநிலை பட்டம்பெற்ற 'இளைஞர்'

98-Year-Old-Man-Clears-Masters-Exam-In-Economics-In-Bihar

98 வயது பீகார் முதியவர் ஒருவர் பொருளாதாரப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். 

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ராஜ்குமார் என்பவர் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு வயது 98 ஆகும். இதற்காக பாட்னாவில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ராஜ்குமார் என்ற அந்த முதியவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

பட்டம் பெற்ற பிறகு அவரிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்கள், இளம் தலைமுறையினருக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்னவென்று அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, எவ்விசயத்திலும் இடைவிடாது முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும் என்று ராஜ்குமார் பதிலளித்தார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close