ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ எடுக்கப்பட்டது அப்போலோ மருத்துவமனையா? அல்லது போயஸ் கார்டன் இல்லமா? என்ற கேள்வி எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இதனை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்தே ஓராண்டை தாண்டிவிட்ட, அவர் சிகிச்சை பெற்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஜெயலலிதா பற்றி ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதால், அவர் அப்போலோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளதாக வெற்றிவேல் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ எடுக்கப்பட்டது அப்போலோவா? அல்லது போயஸ் கார்டன் இல்லமா? என்ற கேள்வி எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காகத்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டது என்றும், நாளை நடக்க உள்ள தேர்தலில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?