[X] Close

காங்கிரஸ் தலைவராக இன்று பதவியேற்கிறார் ராகுல்

Rahul-Gandhi-To-Take-Charge-As-Congress-President-Today

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று பதவியேற்கிறார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் திளைக்கின்றனர்.


Advertisement

கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரசின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, உடல் நலக்குறைவாக இருப்பதால் கட்சியின் செயல்பாடுகளை ராகுல் காந்தியே கவனித்துவந்தார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி ராகுல்காந்தி போட்டியின்றி கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 6 வது நபர் ராகுல்காந்தி. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல்காந்தி, தற்போது தலைவராகி கட்சியை வழிநடத்தவுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை மறுநாள் அறிவிக்கப்படவுள்ள நிலையில்,ராகுல் பதவியேற்கிறார். 


Advertisement

இருமாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியையே தழுவும் என்று பெரும்பாலான ஊடக கருத்துக் கணிப்புகள் கூறிவருவதால், கட்சித் தலைவராக ராகுல்காந்தி அதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்கவுள்ளதைத் தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் தலைவர் பதவியில் இருந்து மட்டும்தான் ஓய்வுபெறவுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close