Published : 22,Feb 2017 06:57 AM

போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin-participate-in-DMK-Protest

சட்டப்பேரவை நிகழ்களை கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் கா‌ஞ்சிபுரத்திலும் திமுகவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்