Published : 16,Nov 2017 12:15 PM
டிசம்பர் 11-ல் குளிர்காலக் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கமாகும். ஆனால் இந்த முறை 15 நாட்களுக்கு முன்பே குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது டிசம்பர் 11ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெற்றது.