Published : 03,Nov 2017 08:45 AM

சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Heavy-rain-alert-to-chennai

அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளது. அதன்காரணமாக, கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒ‌ருசில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலமுறை ‌இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது‌.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்