[X] Close

சாலை விபத்து: கல்லூரி மாணவி உட்பட மூவர் உயிரிழப்பு

Road-accident--3-people--death--including-college-student

வேலூரில் இருசக்கர வாகனமும், பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். 


Advertisement

வாணியம்பாடி புதூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் பள்ளி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் சென்ற கல்லூரி மாணவர் சந்தோஷ் மற்றும் காயத்ரி என்ற மாணவி ஆகியோர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் ‌சிகிச்சை பெற்று ‌வருகின்றனர்.
அதே போல் மதுராந்தகத்தில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் வேன் ஒன்று நிலை தடுமாறி எதிரே வந்த டாடா மேஜிக் மீது மோதியது. இதில் வேனில் பயணித்த வேம்பரசன் மற்றும் வெங்கடராமன் ஆகியோர் உயிரிழந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close