Published : 30,Oct 2017 06:22 AM

தமிழகத்தில் வன்முறை அரசியலுக்கு இடமில்லை: தமிழிசை

BJP-TN-Leader-Tamilisai-Encounter-Opposition-Party

தமிழகத்தில் வன்முறை அரசியலுக்கு இடமில்லை என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழக மக்களுக்கு மத்திய அரசு நல்லதை மட்டுமே செய்து வருகிறது எனக் கூறினார். விலை உயர்வு போன்ற மாயத்தோற்றம் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சர்க்கரை விலை உயர்த்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மாணவர்கள் மீது அரசியல் திணிப்பு செய்வதாக தமிழிசை சாடினார். பாஜக ஆரோக்கியமான அரசியலை செய்கிறது. தமிழகத்தில் வன்முறை அரியலுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். பாஜக நேர்மறையான அரசியலை முன்னெடுத்து செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்