
தமிழக கடலோர பகுதிகள், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாலை முதல் இரண்டு நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தென்மேற்கு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நிலை கொண்டுள்ளதாகக் கூறினார். மேலும், தமிழக கடலோர பகுதிகள், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.