Published : 18,Oct 2017 02:42 PM
தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள்: திரையரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள புதிய திரைப் படங்களை காண திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு இன்று நடிகர் விஜய் நடித்த மெர்சல் மற்றும் சென்னையில் ஒருநாள்-2, மேயாத மான் ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் விஜய்யின் மெர்சல் படத்தைக் காண அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். பல தடைகளைத் தாண்டி மெர்சல் திரைப்படம் திரைக்கு வந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.
சேலத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்கு விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகளை வழங்கினர். டிக்கெட் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில், டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில பகுதிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.