Published : 15,Oct 2017 03:47 PM

இந்தியா பலவீனமான நாடு இல்லை: ராஜ்நாத் சிங்

China-Understands-That-India-Is-No-More-Weak--Rajnath-Singh


இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை சீனா புரிந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்நாட்டின் எல்லைகள் முழுப் பாதுகாப்போடு இருக்கின்றன. அரசின் உறுதியான நடவடிக்கைகளால் நாட்டின் வலிமை சர்வதேச அளவில் கூடியுள்ளது. பயங்கரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் தொடர்கிறது, தினமும் 2 அல்லது 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று வருகிறது என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்