நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆற்றில் மீண்டும் ரசாயன நுரை கலந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டியில் சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதில் அதிகமாக நுரை உருவாகி நச்சுக்காற்று கலந்து வருவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர். சாயப்பட்டறை கழிவு காரணமாக இவ்வாறு நுரை பொங்குகிறதா, அல்லது வேறு எதாவது காரணமா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது பற்றி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெருக்கெடுத்து வந்த நீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு மல்லசமுத்திரம், மதியம்பட்டி சாலையில் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்