Published : 14,Oct 2017 07:17 AM

நவம்பரில் வடகிழக்குப் பருவமழை

northeast-monsoon-from-November

வடகிழக்குப்பருவமழை வரும் நவம்பர் மாத முதல்வாரத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை இன்னும் 24 மணிநேரத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வடகிழக்குப்பருவமழைக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று கருதப்படுகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய கூடும் என்றும் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்