[X] Close

டெங்கு பாதிப்பை குறைத்து கூறுவதா?: விஜயகாந்த் ஆவேசம்

DMDK-chief-Vijayakanth-slams-TN-government-on-Dengue-issue

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களை மர்ம காய்ச்சல் என்று தவறான தகவலை அரசு பரப்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 400 பேர் வரை உயிரிழந்த நிலையில், எண்ணிக்கையை அரசு மறைப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் நிலையில், போர்க்கால அடிப்படையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழக மக்கள் டெங்கு அச்சத்தில் உள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஆட்சியாளர்கள் ஆடம்பரமாக கொண்டாடுவதாகவும், அந்த செலவை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவத்துக்கு செலவிடலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close