[X] Close

வேன் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Car-and-van-crashed-at-Namakkal--3-dead

நாமக்கல் அருகே காரும் வேனும் மோதி கொண்ட விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.

மதுரையை சேர்ந்த ரவீந்திரன் தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் ஜெர்மன் செல்ல காரில் பெங்களூர் சென்றார். காரில் ரவீந்திரன், அவரது மனைவி மலர்கொடி, மகள் பாக்யஸ்ரீ, பேத்தி மைத்ரேயி ஆகியோர் சென்றனர். இந்த கார் நாமக்கல் சுங்கச்சாவடி அருகே வந்தபோது பஞ்சராகி சாலையின் மறுபக்கம் எதிரே சென்ற சரக்கு வேன் மீது மோதி விபத்துள்ளானது.

இதில் படுகாயமடைந்த தந்தை ரவீந்திரன், மகள் பாக்யஸ்ரீ, ஓட்டுனர் அழகு மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மலர்கொடி மற்றும் குழந்தை மைத்ரேயி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close